விக்ரம் ஆடீயோ லான்ச் நடைபெறும் நேரம், இடம் அறிவிப்பு.! பரபரப்பான ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


உலகநாயகன் கமலஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் தான் விக்ரம். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். 

இந்த படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக ஒரு மாதம் இருக்கின்ற நிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

வரும் 15ம் தேதி விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் ரிலீஸ் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நிகழ்ச்சி எந்த இடத்தில் நடைபெறும் என்பது குறித்து எந்தவிதமான தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது. 

இந்நிலையில் வரும் மே 15-ம் தேதி மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikram audio launch time and place


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->