"கோடான கோடி நன்றிகள்" நயன் கணவரின் ட்வீட் வைரல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் நடிகைகள் மற்றும் திரைத்துறை பிரபலங்களின் ட்விட்டர் மற்றும் சமூக வலைதள கணக்குகளை ஹேக் செய்வது தற்போது பேஷனாக இருக்கிறது. தற்காலங்களில் பல பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் அடிக்கடி ஹேக் செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் கூட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருந்தது.

சில நாட்களுக்கு முன்பு இயக்குனரும்  நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்த விக்னேஷ் சிவன் அதற்கு கடும் கண்டனமும் தெரிவித்து இருந்தார்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தை அவர் மீட்டெடுத்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை தனது மீட்டெடுக்கப்பட்ட  ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ள அவர் ஒரு புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். அந்த செய்தியில் தனது ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்தவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர் என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட் மீட்க பட்டுவிட்டது. கடத்த ஒரு வாரமாக மிகவும் அமைதியாக உணர்ந்தேன் என்னுடைய ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்தவருக்கு நன்றி என அந்த பதிவில்  தெரிவித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vignesh shivan thanks the hacker for a peacefull week


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->