'என் உயிரான உன்னை அதிகமாக காதலிக்கிறேன்' - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு!! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு, மலையாளம் என திரைப்படங்களில் நடித்து வரும் நயன்தாரா முதல் முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த ஜவான் திரைப்படம் ரூ. 1140 கோடியை வசூலித்தது. 

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாக உள்ளனர். 

இவர்களது குழந்தைகளுக்கு உயிர்-உலக் என பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், காதலை நம்பும் அனைவருக்கும் காதல் தின வாழ்த்துக்கள். எனது தங்கத்துடன் ஒரு சதாப்தம். எனது உயிரும் உலகமாய் இருந்தவள் நீ.. தற்போது உயிர் உலகம் நாமாக மாறி இருக்கிறோம். 

வயது முதிர்வில் இன்னும் கடந்து வந்த பல தருணங்களை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். நமது முதுமையிலும் பல தருணங்களை ரசிக்க நீண்ட தூரம் என்னுடன் வந்ததற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். 

என் உயிரான உன்னை அதிகமாக காதலிக்கிறேன் என புகைப்படங்களை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vignesh Shivan post goes viral


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->