விரைவில் நயன் -விக்கி திருமணம்.! உறுதியாக வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


சிம்பு மற்றும் வரலட்சுமி நடிப்பில் உருவான போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின் நயன்தாராவுடன் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இணைந்த பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டு தற்போது வரை அந்த காதல் நீடித்து வருகிறது.

இறுதியாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படம்  இந்தப் படம் வெளியாகியுள்ளது. சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நீண்ட வருடங்களாக காதலித்து வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த் நிலையில், அவர்களது திருமணம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vignesh nayanthara marriage in june


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->