இடைவிடாத கைதட்டல்... சர்வதேச அரங்கில் சாதனை படைத்த ''விடுதலை''! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் முன்னணி திரை பிரபலங்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் முதல் முறையாக விடுதலை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில் நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் சூரி நடிப்பில் உருவான விடுதலை 1, விடுதலை 2 திரையிடப்பட்டது. 

இதில் 2 பாகத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அது மட்டுமல்லாமல் பார்வையாளர்கள் சுமார் 5 நிமிடங்கள் எழுந்து நின்று தொடர்ந்து கைத்தட்டல் கொடுத்து படகு குழுவினரை பாராட்டினர். இது தொடர்பான புகைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viduthalai movie update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->