அஜித் நடிக்கும் ''விடாமுயற்சி'' திரைப்படத்தின் சூப்பர் அப்டேட்! - Seithipunal
Seithipunal


மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ''விடாமுயற்சி''. இந்த திரைப்படத்தின் படபிடிப்பு அண்மையில் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. 

இந்த திரைப்படத்தில் திரிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்ஜூன் தாஸ், ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில் தொழில்நுட்ப கலைஞர்களை அஜித் புகைப்படம் எடுத்திருந்தார். அவை இணையதளத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 

இதற்கிடையே விடாமுயற்சி திரைப்படத்தின் ஓ டி டி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நிறைவடைந்து விட்டதாகவும் விரைவில் வேறு இடத்தில் தொடங்க உள்ளதாகவும் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இந்த திரைப்படம் முடிவடைந்து வருகின்ற மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vidamuyarchi movie update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->