'துணிவை' தொடர்ந்து 'வாரிசு' திரைப்படத்தையும் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்.! - Seithipunal
Seithipunal


விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதில், சரத்குமார், ஷியாம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் வேலைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை தமிழகத்தில் செவன் ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

அதுபோல நடிகர் அஜித்குமார் நடிப்பில் போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்குகின்ற திரைப்படம் தான் துணிவு. இந்த படத்தின் சூட்டிங் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்தப் படமும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த நிலையில் விஜயின் வாரிசு படத்தை சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அஜித் விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் 2 திரைப்படங்களுக்கும் சம அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varisu Red Giant distribute to chengalpattu and Chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->