சென்னை மெட்ரோவில் கலக்கும் வாரிசு போஸ்டரால், ரசிகர்கள் உற்சாகம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிக்கிறார்.இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். 

இந்த திரைப்படத்தில் சரத்குமார், நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. சமீபத்தில், நடிகர் விஜய் பாடியுள்ள 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' எனத் தொடங்கும் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோவும், அதனைத் தொடர்ந்து முழுப்பாடலும் வெளியாகியது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதும் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. 

இந்த படம் 2023ல் வரும் பொங்கலை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாகவுள்ள இந்த படத்தின் போஸ்டர்கள் தற்போது சென்னை மெட்ரோ ரயில்களில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Varisu Poster In Metro station 


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->