தளபதி ரசிகர்களுக்கு டிசம்பரில் சர்ப்ரைஸ்.. வெளியான சூப்பர் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கின்றார். இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகின்றார். 

குஷ்பூ, சரத்குமார், ஷியாம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. படமானது வரும் ஜனவரி மாதத்தில் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. 

சமீபத்தில் இது குறித்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த நிலையில், வாரிசு படத்தின் டிரைலர் தேதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 24 ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. 

இது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திற்கும் டீசர் எதுவும் வெளியிடப்படாமல் நேரடியாக ட்ரைலர் மட்டும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

varisu movie trailer update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->