வாரிசு பட ஆடியோ லான்ச்.. இந்த சேனலில் தான் வெளியாகிறது.!  - Seithipunal
Seithipunal


விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்குகின்ற திரைப்படம் தான் வாரிசு. இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், இதில் பிரபு, சம்யுக்தா, சரத்குமார், யோகி பாபு, ஷியாம் உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கின்றனர்.

இப்படத்திற்கு தமன் இசையமைக்கும் நிலையில் தில் ராஜு படத்தை தயாரிக்கின்றார். வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது. அதே நாளில், அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாக இருக்கின்றது.

சமீபத்தில் வாரிசு படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 

இதன் இசை வெளியீட்டு விழா டிசம்பர் கடைசி வாரத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வாரிசு படத்தின் ஆடியோ லாஞ்ச் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், இந்த விழா நிகழ்ச்சி நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகுமா அல்லது நிகழ்ச்சி நடந்த பின் எடிட் செய்யப்பட்டு வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் இல்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varisu audio lanch telecast in sun TV


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->