அமரன் திரைப்படம் - படக்குழுவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து.! 
                                    
                                    
                                   union minister rajnath singh wish to amaran movie team 
 
                                 
                               
                                
                                      
                                            இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'அமரன்'. ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். 
தீபாவளி பண்டிகையில் வெளியான இந்தப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி உருவாகியுள்ளது. 

ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. கடந்த தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம், தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே இந்தப் படத்திற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 'அமரன்' படக்குழுவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       union minister rajnath singh wish to amaran movie team