நாளை அஜித் பிறந்த நாளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! ரசிகர்கள் படுகுஷி.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகியது. வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை இப்படம்  பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்பட்டது. 

இதனை தொடர்ந்து தற்போது போனிகபூர்-அஜித்-இயக்குனர் வினோத் கூட்டணியில் ஏகே 61 திரைப்படம் உருவாகிறது. சமீபத்தில் அஜித்தின் 62வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். 

இந்த நிலையில் அஜித்தின் 63வது திரைப்படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சிறுத்தை சிவா இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில்,இதையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

அஜித்தின் பிறந்தநாள் என்ற காரணத்தால் அஜீத்தின் 63வது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tommorrow ajith birthday ak 63 surprise


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->