பொங்கலுக்கு வெளியாகிறது நடிகர் அஜித்தின் துணிவு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது.

இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில், இந்த படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் வெளியாகியது. அதன்படி இந்த படத்திற்கு "துணிவு" என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்லா வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெறும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பாக மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thunivu movie released on Pongal 2023


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->