அஜித் ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் கடைசியாக எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்த வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக இதே கூட்டணி தொடர்கிறது. 

அஜித்தின் துணிவு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க எச். வினோத் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது.

இறுதி கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதமுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துணிவு படத்தின்  முதல் பாடல் அனிருத் குரலில் 'சில்லா சில்லா' என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் காசேதான் கடவுளடா என்ற 2வது பாடல் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாக உள்ளதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thunivu movie 2nd single Kasethan kadavulada today release


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->