சோதனைகளை கடந்து சாதனை..! என் பரம்பரையிலேயே - கண்கலங்கிய ஜி.பி முத்து..!! - Seithipunal
Seithipunal


உடன்குடி ஜி.பி முத்து யார் என்று கேட்டால்? சிறு குழந்தைகள் கூட சொல்லும் என்ற அளவிற்கு, ரஜினிகாந்தை போல பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்றுள்ளவர் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து. இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டுள்ளார். 

ஜி.பி முத்துவிற்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். இவர் பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை வாங்கி பழுது நீக்கி விற்பனை செய்யும் மரக்கடை ஒன்றை நடத்தி வந்த நிலையில், டிக்டாக்கில் பொழுதுபோக்கிற்காக வீடியோ போட்டு வந்த ஜி.பி முத்து ஒரு கட்டத்தில் அதுவே கதியென்று அடிமையாகினர். 

தற்போது, அவருக்கு உள்ள ரசிகர்கள் அவரை அவதூறாக விமர்சித்து வந்தாலும், அதன் மூலமாகவே பலரது மனதிலும் இடம்பெற்றுக்கொண்டார். பல மீம் கிரியேட்டர்களும் அவரது புகைப்படத்தை டெம்ப்லேட்டாக உபயோகம் செய்து வருகின்றனர். 

வெற்றிநடை போட்டு வந்த ஜி.பி. முத்துவுக்கு பல தடைகள் ஏற்பட்டாலும் அதனை உடைத்தெறிந்து தற்போது பெரும் சாதனை கண்டுள்ளார். தனியார் தொலைக்காட்சிகளில் தனது ரசிகர் பட்டாளத்தை வைத்து சிரிக்க வைத்து வரும் நிலையில், ஜி.பி முத்துவின் வாழ்க்கை உயர தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், ஜி.பி முத்து இரண்டாம் தர கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " தனது பரம்பரையிலேயே கார் வாங்கிய முதல் நபர் நான் தான் என்று ஆனந்த கண்ணீர் விட்ட வீடியோ காட்சி " அந்த வீடியோ பதிவில் இடம்பெற்றுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Udankudi GP Muthu buy Second Hand Car Feeling Blessed 15 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal