நயன்தாராவுக்கு குழந்தை பிறந்தது இப்படி தான்.! நிஜமாவே, அம்மா.. அப்பா தான்.. நம்புங்க.!  - Seithipunal
Seithipunal


நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். நீண்ட வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர். 

இவர்களது திருமணம் இந்து முறைப்படி சென்னையில் நடைபெற்றது. இதில் அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மிகவும் பாதுகாப்பான முறையில் இந்த திருமணம் நடைபெற்றது. இதுவரை திருமண வீடியோ கூட வெளியாகவில்லை. 

இந்த திருமண வீடியோ நெட்பிளிக்ட்ஸில் தயாராகி வருகின்றது. திருமணமாகி நான்கு மாதங்களே ஆகியுள்ள நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நயன்தாராவிற்கும் எனக்கும் குழந்தை பிறந்து அப்பா அம்மா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. 

அனைவரும் எங்களை ஆசீர்வதியுங்கள்." என்று தெரிவித்துள்ளார் .இந்த விஷயம் தான் தற்போது ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கிறது. திருமணமாகி நான்கு மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது, அதற்குள் குழந்தை எப்படி பிறக்கும்? அதுவும் நயன்தாரா கர்ப்பமாக கூட இல்லையே என்று குழம்பி போய் இருந்தனர். 

இத்தகைய சூழலில், அவர்கள் இருவரும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இன்னமும் ரசிகர்களால் இந்த செய்தியை நம்ப முடியாமல் திகைத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

this is the reason for nayandhara and vignesh sivan gets baby 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->