தில்லானா மோகனாம்பாள் படத்தின் நாதஸ்வர வித்துவான் எம்.பி.என்.பொன்னுசாமி காலமானார்.! - Seithipunal
Seithipunal


சிவாஜி கணேசன், பத்மினி,  பாலையா, நாகேஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1968-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தில்லானா மோகனாம்பாள்'. ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், கே.வி.மகாதேவன் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 

அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற 'நலந்தானா' என்ற பாடல் இன்றும் பல படங்களில் நாயகன்- நாயகி நலம் விசாரிப்பது போன்ற காட்சிக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்தப் படத்தில் இடம்பெற்ற நாகஸ்வர காட்சிகள் அனைத்துமே பெரிய அளவில் பாராட்டுக்களைப் பெற்றது. இந்தப் படத்தில் சிவாஜியும் அவரது குழுவினரும் தான் இதை இசையமைத்தாக ரசிகர்களுக்கு தெரிந்திருந்தாலும், உண்மையாக நாகஸ்வரம் வாசித்தவர்கள் மதுரையைச் சேர்ந்த நாகஸ்வர வித்வான்களான எம்.பி. என்.சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள் தான்.

இதில், எம்.பி.என்.பொன்னுசாமிக்கு கடந்த 1977-ல் தமிழக அரசு கலைமாமணி விருதை வழங்கியது. அதே ஆண்டில் கிருஷ்ண கான சபாவின் சங்கீதா சூடாமணி விருதையும் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் நாகஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி வயது மூப்புக்காரணமாக மதுரையில் நேற்று காலமானார். அவரது மறைவிற்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thillana mokanaambaal movie nathaswara artist mpn ponnusami passed away


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->