மெட்ரோ ரயில் மற்றும் ஆட்டோவில் ரவுண்டடித்த பாலிவுட் நடிகை ஹேமா மாலினி! ட்விட்டர் வீடியோ! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில் பழம்பெரும் நடிகையாக வலம் வருபவர் ஹேமா மாலினி. 50 வருடங்களுக்கும் மேலாக இந்திய சினிமாவில் அறியப்பட்ட ஒரு பெயர் ஹேமா மாலினி. 1968 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான திரைப்படத்தின் மூலம்  கதாநாயகியாக அறிமுகமான இவர் நடிகை தயாரிப்பாளர்   நடன கலைஞரின் பன்முகத்தன்மை கொண்டவர்.

இவர் பாலிவுட் நடிகர் தர்மேந்திராவை 1980 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இஷா தியோல் மற்றும்  ஆகானா தியோல் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். சினிமா நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த அரசியல்வாதியாகவும்  திகழ்ந்து வருபவர் ஹேமமாலினி.

இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநிலங்களவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது மதுரா தொகுதியிலிருந்து வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  ஹேமா மாலினி  பொதுமக்களோடு இணைந்து மெட்ரோ  ரயிலில் பயணம் செய்திருக்கிறார். அந்த காணொளியையும் தனது  ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு மக்களோடு மக்களாக பயணிப்பது புதுமையான மற்றும் உற்சாகமான அனுபவம் என்ன குறிப்பிட்டுள்ள அவர்  நீண்ட நாட்களுக்குப் பிறகு மெட்ரோ ரயிலிலும்  ஆட்டோவிலும் பயணம் செய்தேன் என குறிப்பிட்டுள்ளார். மெட்ரோ ரயில் அவர் பயணம் செய்யும்போது அவருடன் சகப்பயணிகளுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்  இந்த வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The legendary actress of Tamil cinema who was traveling in the metro was people trilled to see her in metro


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->