பேட்ட படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.!
பேட்ட படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.o. இப்படத்தில் எமிஜாக்சன் மற்றும் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடித்துள்ளார். சுமார் 600 கோடி பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த நவம்பர் 29 ஆம் தேதி '2.௦' படம் உலகம் முழுவதும் சுமார் 10000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பேட்ட'. இப்படத்தில் பெரும் திரையுலக பிரபலங்களான திரிஷா, சிம்ரன், விஜய்சேதுபதி, சசிகுமார் மற்றும் பாபிசிம்ஹா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தினை பிரபல நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் இரு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு மட்டும் காலா, '2.o' என இரண்டு படங்கள் வெளியானது. இதனைத்தொடர்ந்து, பேட்ட படம், '2.o' படத்திற்கு பிறகு வெறும் ஒன்றரை மாத இடைவெளியில் வெளியாவதால் பொங்கலுக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரஜினி படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வாங்கியிருப்பது இதுவே முதல் முறையாகும். எனவே உதயநிதி ஸ்டாலின் நாளை நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
The famous company that captured the Tamil film release rights of the film.