மறுபடியும்.. அதே அவதாரத்தில் தம்பி ராமையா.?! குஷியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


சாட்டை, அப்பா, ஓ.டி.டியில் ரிலீசான வினோதய சித்தம் படங்களைத் தொடர்ந்து, இயக்குனர் சமுத்திரக்கனி - தம்பி ராமையா கூட்டணியில் உருவாகி வரும் படம் ராஜா கிளி. இப்படத்தின் நாயகனாக சமுத்திரகனி நடிக்கிறார். 

நாயகியாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியா ஸ்ரீ சௌமியா ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தின் முக்கிய வேடத்தில் பி.எம்.எஸ் பாஸ்கர், இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவீன், இயக்குனர் மூர்த்தி, கும்கி அஸ்வின், ரேஷ்மா, வெற்றி குமரன், தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி முத்து உட்பட பலரும் நடித்து வருகின்றனர். 

இந்த படம் குறித்த தம்பி ராமையா கூறுகையில், "இப்படத்தை வி ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நான் படத்தை இயக்குவதற்கு முக்கிய காரணமே சுரேஷ் காமாட்சி தான். அவர் வெறும் தயாரிப்பாளராக மட்டுமல்லாது, மிகச் சிறந்த இயக்குனரும் கூட. 

12 இயக்குனர்களிடம் இந்த கதையை கூறிவிட்டு இறுதியாக சுரேஷ் காமாட்சியிடம் கூறினேன். அவர் கூறிய வார்த்தைக்கே இயக்குகிறேன். இந்த படத்தை சுரேஷ்காமாட்சி தயாரிக்கிறார். படம் வாழ்வியல் கதை, ஒரு மனிதனின் சுயசரிதை என்பதை இதனை நான் இயங்குவதே சரியாக இருக்கும். இதனால் மீண்டும் டைரக்ஷனில் இறங்கி உள்ளேன்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thampi Ramaiyah Return to Direction


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal