விஜய் பட நடிகை இலியானா கர்ப்பமா.?சமூக வலைதளத்தில் குட் நியூஸ்... ரசிகர்கள் வாழ்த்து மழை! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் இலியானா டி க்ரூஸ். இவர் சங்கரர் இயக்கத்தில் தளபதி விஜய்  ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடித்த 'த்ரீ இடியட்ஸ்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்  நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தவர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இலியான இன்று காலை தனது ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் புகைப்படத்தின் மூலம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இவர் பதிவு செய்த அந்த பதிவு அவரது ரசிகர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த செய்தியை  அவருக்கு நெருக்கமானவர்களும் ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இன்று காலை தான் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கும் உலகிற்கும் தெரியப்படுத்தி இருக்கிறார் இலியானா.  இது தொடர்பாக ஒரு டீசர்ட் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள அவர் " விரைவில் வர இருக்கும் உன்னை சந்திப்பதற்கு காத்திருக்க முடியாது என் குட்டி அன்பே" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளத்தின் மூலம் குட் நியூஸ் பகிர்ந்த இலியானாவிற்கு ரசிகர்களும் நடிகர்களும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர். இலியானா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவை சார்ந்த பிரபல புகைப்பட கலைஞரான ஆண்ட்ரூ நீபோன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathy movie heroine who gave good news on social media fans congratulated her


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->