விஜய்யின் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடக்கம்.. வெளியான அசத்தல் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தளபதி விஜய் தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் 'தளபதி 68' என்ற பெயரிடப்படாத படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில் தளபதி 68 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த படத்திற்கான நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathi 68 shooting starts on October


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->