ஜெயிலர் பட டைரக்டருக்கு ஏற்பட்ட அவமானம்... ஓடிச் சென்று ஆறுதல் கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் தற்போது இளம் இயக்குனர்களின் கை ஓங்கி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப் குமார், பா. ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் என இளம் இயக்குனர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர். இவர்களது படங்களில் பணியாற்ற மிகப்பெரிய கதாநாயகர்களும் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் கோலமாவு கோகிலா,  டாக்டர் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் நெல்சன் திலிப் குமார். இவரது இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம்  தோல்வி அடைந்தாலும் டாக்டர் படத்தின் வெற்றியால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மிகப்பெரிய  நட்சத்திரக் கூட்டணியுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தற்போது ஜெய்லர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருது நிகழ்ச்சி ஒன்றில்  நெல்சன் திலிப் குமாருக்கு சில விரும்பததகாத நிகழ்வுகள் நடைபெற்று இருக்கின்றன. இதனை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் அவரை நேரில் சென்று சந்தித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

மேலும் நெல்சன் திலிப் குமாரிடம் தனது சினிமா பயணத்தின் ஆரம்ப காலகட்டங்களில் தனக்கு ஏற்பட்ட அவமானங்களை எடுத்துக் கூறி சினிமாவில் ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும் அதற்காக மனம் தளர்ந்து விடக்கூடாது என அறிவுரை கூறியிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அண்ணாத்தை மற்றும் தர்பார் திரைப்படங்களின் தோல்வியால் வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார். இந்நேரத்தில் தனது புதிய படத்தின் இயக்குனர் மனதளவில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவரை சந்தித்து ஆறுதல் படுத்தியதாக திரையுலக வட்டாரம் தெரிவிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Superstar Rajini ran away and consoled his director after his diector face a humiliation at a award function


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->