இதுவரை கொடுக்காத சர்ப்ரைஸ்.. குஷ்புவின் பிறந்தநாளில் சுந்தர்.சி அசத்தல்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் நிறைய நட்சத்திர ஜோடிகள் இருக்கின்றன. இதில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் பலர். அவர்களில் ஒருவர் தான் சுந்தர் சி மற்றும் குஷ்பூ தம்பதிகள். சுந்தர் சி தனது படங்களில் மிகவும் பிசியாக இருப்பார். 

குஷ்பூ அவ்வப்போது படங்களில் நடித்துக் கொண்டு அரசியலில் முழு ஈடுபாட்டை காட்டி வருகிறார். இவர்கள் இருவரும் எப்போதாவதுதான் சந்தித்துக் கொள்வார்கள் என்று குஷ்பூ அடிக்கடி பதிவிடுவார். 

சுந்தர். சி பிறந்த நாள் சிறப்பு.! குஷ்பூ எப்படி வாழ்த்திருக்காங்க பாருங்க.!  - Seithipunal

குஷ்புவின் மகள்களும் தங்களது படிப்பு, கெரியர் என்று கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி குஷ்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நிறைய அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இந்த வாழ்த்துகளினால் குஷ்பூ மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி இருந்த நிலையில் சுந்தர் சி அவர் இருந்த இடத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து பிறந்தநாள் பரிசளித்துள்ளார். 

இது குறித்து குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சுந்தர் சி எப்பொழுதும் ரொமான்டிக்காக இல்லாத ஒரு கணவர். இந்த பிறந்த நாளுக்கு எனக்கு அவர் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sundhar c surprise to kushboo


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal