நான் உதவுகிறேன்.. சிவசங்கர் மாஸ்டருக்கு உதவ முதல் ஆளாக கை தூக்கிய சோனு சூட்.! - Seithipunal
Seithipunal


நடன இயக்குனரான சிவசங்கர் மாஸ்டர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். இவர் நடன இயக்குனராக மட்டுமல்லாமல் பரதேசி, கண்ணா லட்டு தின்ன ஆசையா மற்றும் அரண்மனை உள்ளிட்ட நிறைய படங்களில் நடித்திருக்கிறார். 

தற்போது சிவசங்கர் மாஸ்டர் குறைவா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். 

மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சிவசங்கர் மாஸ்டருக்கு அதிக செலவிலான மருத்துவம் தேவைப்படுவதாகவும் ஆனால் அந்த அளவிற்கு தங்களிடம் பணம் இல்லை என்றும் அவரது குடும்பத்தார் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்துள்ளனர். 

கொரோனா வைரஸ் காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு பாலிவுட் நடிகர் சோனு சூட் நிறைய உதவிகளை செய்து வந்தார். அந்த வகையில் தற்போது சிவசங்கர் மாஸ்டருக்கு தேவையான உதவிகளை செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இது இரு தரப்பு ரசிகர்களிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sonu sout willing help to Shiva Shankar master


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->