எஸ்கே 26 படத்தின் இயக்குனர் யார்? - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த படக்குழு.!!
sk 26 movie director name released
விஜய் டிவி மூலம் திரைத்துறையில் தடம் பதித்து தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் சுதா கொங்கரா இயக்கத்தல் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ந் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான 26 வது படத்தை இயக்கப் போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளன. அதற்கான தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
அதாவது, 2022-ம் ஆண்டு வெளியான 'டான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தி, தான் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
sk 26 movie director name released