மகனைக் க்யூட்டாக கூப்பிட்ட சிவகார்த்திகேயன்.! - Seithipunal
Seithipunal


ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ள இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. 

இந்த விழாவில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா மற்றும் மகன் குகனுடன் கலந்து கொண்டார். அப்போது அவர், தனது குழந்தைகள் அயலான் ஏலியனைப் பார்த்துப் பயப்படவில்லை. அவர்களுக்கு அந்த ஏலியன் மிகவும் பிடித்திருந்தது என்று தெரிவித்தார்.

 

மேலும் அவர், ‘அயலான்’ படத்துடன் குகனும் சேர்ந்து வளர்ந்திருக்கிறான் என்பதால் இந்தப் படம் தனக்கு எப்போதுமே ஸ்பெஷல். குகன் வந்துள்ள சிவகார்த்திகேயனின் முதல் சினிமா நிகழ்ச்சி இது என்றது தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் குகனுடன் இருந்த க்யூட்டானத் தருணங்களை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். 

அத்துடன், ‘என் சுட்டிப் பயலே நீ அயலா’ என்ற பாடல் வரிகளையும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் அவரது ரசிகர்கள் மகள் ஆராதனாவை பாடகியாக கொண்டு வந்தது போல, குகனையும் நடிக்க வைக்கத் திட்டமா? என்று கேள்வி எழுப்பி, லைக்ஸ் கொடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sivakarthikeyan shared son vedio


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->