பிரபல பாடகி சாலை விபத்தில் மரணம்! சோகத்தில் திரையிறையினர்!! - Seithipunal
Seithipunal


பிரபல மராத்தி பாடகி கீதா மாலி. இவர் பல்வேறு படங்களில் பாட்டு பாடியுள்ளார். மேலும் தனி ஆல்பங்களையும் வெளியிட்டு பிரபலமானவர். இவர் சமீபத்தில் இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றுவிட்டு நேற்று காலை மும்பைக்கு திரும்பினார். மும்பை விமான நிலையத்திலிருந்து தனது கணவருடன் காரில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

அதிகாலை 3 மணியளவில் தானே மாவட்டத்தில் உள்ள சாஹ்பூர் அருகே வந்து கொண்டு இருந்தபோது காரின் மீது லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் கீதா மாலியும், கணவர் விஜய்யும் படுகாயம் அடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் கீதா மாலி சிகிச்சை பலனின்றி பரிதமாக உயிரிழந்தார். அவரது கணவர் விஜய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

singer geeta mali passed away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->