அச்சு அசலா அப்படியே இருக்கீங்க.. ஷிவாங்கி வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்.!  - Seithipunal
Seithipunal


குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமடைந்த ஷிவாங்கியின் வீடீயோ தற்போது வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக போட்டியாளராக கலந்து கொண்டவர் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். அவர் பாடல் பாடுவது அழகாக இருந்தாலும் கூட அவருடைய சுட்டி தனத்திற்கு தான் நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். 

அதன் பின்னர், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி கலந்து கொண்டார். இதில் அஸ்வினுடன் சேர்ந்து அவர் செய்கின்ற கலாட்டாவாக இருக்கு நிறைய பேர் அடிமையாகிவிட்டனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஷிவாங்கிக்கு ஏற்பட்ட பிரபல தன்மையால் அவருக்கு நிறைய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளது. சமீபத்தில் சிவாங்கி சிவகார்த்திகேயனுடன் டான் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திலும் காசேதான் கடவுளடா திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். 

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா கெட்டப்பில் வெளியிட்டுள்ள வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shivangi video viral on instagram 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->