நாங்க காஸ்டிங் ஏஜென்டுகள் வச்சுருக்கோமா?....எஸ்.கே தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சிவகார்த்திகேயன்  தயாரிப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அவர், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தற்போது அவர் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்று, வசூல் ரீதியாக வாரி குவித்தது.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன்  தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் "எங்கள் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜென்டுகள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம்.

இதற்கு மாறாகத் தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைதள பதிவுகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shall we have casting agents sk production company alert


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->