ஆஸ்கர் போட்டிக்கு தேர்வான இந்திய திரைப்படத்தில் நடித்த சிறுவன் மரணம்.. சோகத்தில் திரையுலகம்.! - Seithipunal
Seithipunal


ஆஸ்கர் போட்டிக்கு தேர்வான 'செல்லோ ஷோ' திரைப்படத்தில் நடித்த சிறுவன் ராகுல் கோலி உயிரிழந்தார்.

இந்த ஆண்டு ஆஸ்கர் விருது போட்டி தேர்வுக்கு இந்தியா சார்பில் குஜராத்தி மொழி திரைப்படமான 'செல்லோ ஷோ' தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சிறுவன் ராகுல் கோலிக்கு (வயது 15) திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் லூகேமியா என்ற ரத்த புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ராகுல் கோலிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ராகுல் கோலியின் மறைவு இந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுவன் நடித்துள்ள செல்லோ ஷோ திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படம் வெளியாவதற்கு முன்பே சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செல்லும் ஷோ திரைப்படத்தை தியேட்டரில் பார்த்த பிறகு தான் ராகுலுக்கு இறுதி சடங்கை செய்வோம் என்று அவரது தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sello show child artist Rahul Kohli death


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->