விஜய் சூப்பர் ஸ்டாரானாது இப்படி தான்.. சீமானின் வெறித்தனமான பேச்சு.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கம் வாரிசு படத்தில் விஜய் நேரடியாக தெலுங்கில் நடித்துள்ளார். இதில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளில் வெளியாக உள்ளது.

இதில் சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு மற்றும் கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பொங்கல் தினத்தை முன்னிட்டு வாரிசு படம் ரிலீசாக இருக்கின்றது. 

இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு அடி பட துவங்கியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த நிலையில் சென்னையில் நடந்த இரும்பன் திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எம்ஜிஆரின் சினிமா வாழ்க்கை குறித்து பேசினார்.

இதனை தொடர்ந்து, "விஜய் நடிக்க வருவதற்கு அவருடைய அப்பா உதவி புரிந்திருப்பார். விஜய் இருப்பதற்கு காரணம் அவரது கடின உழைப்புதான். விஜய் அருமையாக நடனமாடுவார் அவரைப் போல நடனமாட இந்தியாவிலேயே நடிகர் இல்லை." என்று புகழ்ந்துள்ளார். ஏற்கனவே, சூப்பர் ஸ்டார் என்று கூறியதற்கு ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து வரும் நிலையில், சீமான் இப்படி பேசியது ரஜினி ரசிகர்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman speech super star as Actor Vijay


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->