வசூல் மழை பொழியும், 'DD returns' படத்திற்காக சந்தானம் வாங்கிய சம்பளம் இவ்வளவா.?!  - Seithipunal
Seithipunal


காமெடி நடிகராக தொலைக்காட்சியில் அறிமுகமான சந்தானம் அதன்பின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது ஹீரோவாக நடித்து வருகின்றார். நகைச்சுவை நடிகர் என்பதை மறக்காமல் அவர் ஹீரோவாக நடித்து அனைவரும் மனதிலும் இடம் பிடித்து விட்டார். 

அவரது நடிப்பில், இனிமே இப்படித்தான், A1, தில்லுக்கு துட்டு, பாரிஸ் ஜெயராஜ் என்று அவரது நடிப்பில் வெளியாகிய பல படங்களும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து அவரது திறமைக்கு ஏற்றவாறு நகைச்சுவைக்கும் கதைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். 

இறுதியாக அவரது நடிப்பில் நகைச்சுவை மற்றும் ஹாரர் கலந்த 'DD Returns' திரைப்படம் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 28 இல் வெளியான இந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த திரைப்படம், ₹.12 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இதன் வசூல் தோனி தயாரிப்பில் வெளியாகிய LGM படத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரிகிறது. 

இதுவரை, இந்த படம், 9.55 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றன. இந்த நிலையில், இப்படத்திற்காக சந்தானம் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அவர், 'DD Returns' படத்திற்காக ரூ. 5 கோடி சம்பவம் வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Santhanam salary in DD returns movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->