சந்தானத்தின் 'கிக்' படத்தின் டீஸர் ரிலீஸ்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சந்தானம் நடித்துள்ள கிக் படத்தின் டீசர் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாக தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரசிகர்களிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் கிக் என்ற புதிய படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், கன்னடம் என இரு மொழிப்படமாக உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தாராள பிரபு படத்தில் நடித்த தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா, ஒய் ஜி மகேந்திரன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படிப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படுக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனையடுத்து தற்போது கிக் படத்தின் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த டீசரில் சந்தானத்தின் வழக்கமான காமெடி மற்றும் காதல் காட்சிகள் நிறைந்துள்ளதாக காட்டப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ ரசிகர்களுடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Santhanam in Kick movie teaser video viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->