சந்தானத்தின் 'கிக்' படத்தின் டீஸர் எப்போது ரிலீஸ்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சந்தானத்தின் 'கிக்' படத்தின் டீஸர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கன்னட சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தனம் நடித்துள்ள கிக் திரைப்படம் வரும் செப்டம்பர் 1ம் தேதி திரையரங்கங்களில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சந்தனத்திற்கு ஜோடியாக தாராள பிரபு படத்தில் நடித்த தன்யா ஹோப் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, ஒய் ஜி மகேந்திரன், தம்பி ராமையா, பிரம்மானந்தம், ஷகீலா, கூல் சுரேஷ் உள்ளிட்ட திரைப்படங்கள் பலரும் நடித்துள்ளனர். பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முழு நீள காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சந்தானத்தின் கிக் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நாளை மாலை 4.01 மணிக்கு கிக் படத்தின் டீஸர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Santhanam in Kick movie teaser tomorrow release


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->