சந்தானத்தின் 'கிக்' திரைப்படம் எப்போது ரிலீஸ்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கன்னட சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தனம் நடித்துள்ள திரைப்படம் கிக். இந்த படத்தில் சந்தனத்திற்கு ஜோடியாக தாராள பிரபு படத்தில் நடித்த தன்யா ஹோப் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, ஒய் ஜி மகேந்திரன், ஷகீலா, கூல் சுரேஷ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முழு நீள காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ஃபார்ச்சூன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள, சந்தானத்தின் கிக் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Santhanam in kick movie release on September 1


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->