சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் 'தலைப்பு' வெளியீடு! - Seithipunal
Seithipunal


நடிகர் சந்தானம் கதாநாயனாக நடிக்கும் அவருடைய 15-வது படத்தின் முதல்பார்வை போஸ்டர் இன்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

சந்தானம் நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா மற்றும் சபாபதி ஆகிய படங்கள் கடந்த ஆண்டு வெளியாகின. இதனை தொடர்ந்து, சமீபத்தில் ‘குலு குலு’ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், சந்தானம் நாயகனாக நடிக்கும் அவருடைய 15-வது படத்தை இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்குவார் என்று தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து, தற்போது இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக, தாராள பிரபு படத்தில் கதாநாயகியாக நடித்த தான்யா ஹோப்  நடிக்கிறார். மேலும், இப்படத்தில் பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாங்காங், லண்டன் எனப் பல இடங்களில் நடைபெறவுள்ளது. இப்படத்தில், அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். மேலும், இப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜை பெங்களூரில் நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

santhanam 15 th movie title


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->