ராமராஜன் பிறந்த நாளில், சாமானியன் படக்குழு சர்ப்ரைஸ்.! - Seithipunal
Seithipunal


90 காலகட்டங்களில் கிராம கதைகள் என்றாலே நடிகர் ராமராஜன் தான் அனைவரது நினைவுக்கும் வருவார். அந்த அளவிற்கு அவரது கிராமத்து கதைகள் ஹிட்டாகியுள்ளன. அவரது கரகாட்டக்காரன் திரைப்படம் திரையரங்குகளில் மாத கணக்கில் ஓடியது. குறிப்பிடத்தக்கது. 

ஹீரோவாக மட்டும் சினிமாவில் நடித்து வந்த அவருக்கு ஹீரோ வாய்ப்பு அமையாததால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அவர் மீண்டும் படத்தில் நடிக்க மாட்டாரா என்பது ரசிகர்களின் ஏக்கமாக இருந்த நிலையில் தற்போது சாமானியன் என்ற படத்தில் ஹீரோவாக ராமராஜன் நடித்து கம்பேக் கொடுத்துள்ளார். 

இந்த படத்தில் ராமராஜனுடன் சேர்ந்து எம்எஸ் பாஸ்கர், ராதாரவி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் சாமானியன் ஐந்து மொழிகளில் வெளியாகும் என பட குழு தெரிவித்துள்ளது. 

இந்த படத்தின் போஸ்டர், ட்ரெயிலர் உள்ளிட்டவை சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், தற்போது சாமானியன் படகுழு ராமராஜன் பிறந்த நாளில் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. அவரது பிறந்த நாளில் இருப்பிடத்திற்கு சென்று சர்ப்ரைஸாக கேக் வெட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samaniyan movie team surprise to ramarajan in his birthday 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->