"அடேங்கப்பா"! இவ்வளவு செலவு செய்த ஆஸ்காருக்கு போய் இருக்காங்களா!!! வெளியாகிய உண்மை நிலவரம்! - Seithipunal
Seithipunal


95 ஆவது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கடந்த வாரம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய திரைப்படமான ஆர்.ஆர்.ஆர்  திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலும் தி எலிபன்ட் விஸ்பர்ஸ் என்ற ஆவணப்படமும்   விருதுகளை வென்றென.

இத்திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் இயக்குனர்கள் பலரும் அந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர். படத்தின் இயக்குனர் ராஜமௌலியின் குடும்பத்தினர் இந்த விழா அரங்கில் கடைசி வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இது தொடர்பாக தெலுங்கு சினிமா ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் கடைசி வரிசையில் அமர வைக்கப்பட்டதற்கான விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாவிற்கு ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, அவரது மனைவி பாடலாசிரியர் சந்திர போஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

படத்தின் இயக்குனர் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினர் படத்தின்  முன்னணி நாயகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரின் குடும்பத்தினரும் 25 ஆயிரம் டாலர்  பணம் செலுத்தி டிக்கெட் எடுத்து தான் நிகழ்ச்சியை காணச் சென்றிருக்கிறார்கள் என்ற உண்மை தற்போது வெளியாகியிருக்கிறது. 25,000 டாலர் என்றால் இந்திய மதிப்பில் 20 லட்சம் ரூபாய். ஆர்.ஆர்.ஆர்   படக்குழுவினர் ஒரு கோடி ரூபாய் வரை செலவழித்து விழாவைக் காண சென்றிருக்கிறார்கள் என்பது தற்போது வெளியாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RRR crew spend crores to attend the oscars festival


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->