ராஜா ராணி 2- வில் புதிய சந்தியா இவரா.?! சீரியலில் களமிறங்கும் பிரபல மாடல் அழகி.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று தான் ராஜா ராணி இரண்டாம் பாகம். முதல் பாகத்தில் ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக நடித்தனர். 

இரண்டாவது பாகத்தில் சஞ்சீவுக்கு பதில் சித்தூ நடித்து வருகிறார். முதல் குழந்தை பிறந்த பின்னர் இயல்பு நிலைக்கு மாறிய ஆலியா இந்த தொடரின் ஆரம்பம் முதல் நன்றாக நடித்து வருகின்றார். தற்போது அவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். 

காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இருக்க அவருக்கு குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த கதை தான் ராஜா ராணி 2. கர்ப்பமான நிலையில் ஆலியா சீரியலில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் தான் அவர் சீரியலில் இருந்து விலகினார். 

தற்போது நடித்து வரும் சந்தியா கதாபாத்திரத்தில் மாடல் அழகி ரியா விஸ்வநாதன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

riya visvanadhan in raja rani 2 santhiya character 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->