அலெக்ஸ் பாண்டியனாக விரைவில் வெளிவரும் தர்பார்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனமானது தயாரித்து வருகிறது. 

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க., கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார். மேலும்., திரையுலக பிரபலங்கள் பலர் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணியை சந்தோஷ் சிவன் மேற்கொள்கிறார். 

இந்த படத்தின் முதற்பார்வை நேற்று கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான நிலையில்., ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தர்பார் படத்தின் படப்பிடிப்பானது மும்பையில் துவங்கியுள்ள நிலையில்., பூஜை போடப்பட்டு வெற்றிகரமாக படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் துவக்கத்தில் இருந்தே ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும்., இன்னும் பல தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருந்த நிலையில்., ரஜினி காவல் துறை அதிகாரி வேடத்தில் நடித்திருந்த அலெக்ஸ் பாண்டியன் வேடத்தை போன்ற கதாபாத்திரம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கதாபாத்திரத்திற்கு அவர் கடுமையான முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajinikanth next movie darbar like a rajini old movie alex pandiyan police character


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->