ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்.. ஜெயிலர் படத்தின் ட்ரைலர் வீடியோ வைரல்.! - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ட்ரைலர் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரப், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், நடிகை தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' என்ற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்க்கையில் ஜெயிலர் திரைப்படம் அதிரடி ஆக்சன் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதுl


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajinikanth in Jailor movie trailer video viral


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->