ஏ.ஆர்.ரகுமானுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினிகாந்த்.! அசத்தல் பதிவு.!  - Seithipunal
Seithipunal


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தயாரித்த 99 சாங்ஸ் திரைப்படத்திற்கு அவரே இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகியது. இதனை இயக்குனர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார். 

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் வெளிவருகிறது. வருகின்ற ஏப்ரல் 16ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடைபெற்றது. 

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், 99 சாங்ஸ் பட விழாவில் செய்தியாளர்களை சந்தித்த போது, "இது எனது முதல் படம்.. புதிய படம், புதிய இயக்குனர், ஆனால் பழைய கம்போஸர். இசைத்துறையில் உள்ள பிரச்சனைகள், இசை படைப்பாளர்கள் சந்திக்கும் பெரும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளை படமாக எடுத்து இருக்கிறோம். என்னுடைய வாழ்க்கையில் நான் கவனித்தவற்றை படமாக எடுத்துள்ளேன்." என்று தெரிவித்தார். 

இத்தகைய நிலையில், இசையமைப்பாளர் AR.ரஹ்மானுக்கு நடிகர் ரஜினி தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதில்வில், "என்றென்றும் உங்களுக்குச் சிறந்ததையும், உங்கள் படத்தின் வெளியீட்டுக்காகவும் உங்களை வாழ்த்துகிறேன் ரஹ்மான் ஜி. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini wishes to AR rahman 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->