ரஜினி கூறிய அந்த நான்கு விஷயங்கள்!! திடீரென வெளியிடப்பட்ட வீடியோ!!  - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் 'ஒத்த செருப்பு' படத்தில் நடித்து இயக்கி உள்ள பார்த்திபனை வாழ்த்தி  நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர், "எனது அருமையான நண்பர் பார்த்திபன், அவர் நல்ல படைப்பாளி. 

மிகவும் புதிது புதிதாக சிந்திக்க கூடியவர். ஆனால், சிறிது காலம் படங்களை இயக்கவில்லை. ஆனால், நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். நான் அவரிடம் படம் இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். தனி ஒருவர் மட்டுமே நடிக்கின்ற ஒரு வித்தியாசமான 'ஒத்த செருப்பு' படத்தை இப்போது எடுத்துள்ளார்.

நான்கு விஷயங்கள் ஒரு படம் வெற்றி பெறுவதற்கு வேண்டும். ஒன்று படத்தின் கரு புதிதாக இருக்க வேண்டும். அதேபோல் எவரும் இதுவரை சிந்திக்காததாக இருக்க வேண்டும். மேலும், நல்ல கருத்துக்களை சொல்வதாக இருத்தல் வேண்டும். 

முக்கியமாக குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருக்க வேண்டும். கதை மிகவும் யதார்த்தமாக இருக்க வேண்டும். அடுத்து படத்திற்கு நல்ல விளம்பரம் செய்வது மிக மிக அவசியம் " என அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini says about parthipan movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->