ரஜினியின் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. வைரல் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . தற்போது இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக படக்குழு காத்திருப்பதாகவும் செய்திகள் நிலவி வருகின்றன.

மேலும், இந்த படத்தில் தமன்னா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னடத்தின் பிரபலமான நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதனிடையே ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின்  படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியதை புகைப்படமாக வெளியிட்டுள்ளனர். தற்போதைய குறித்த புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini in jailor movie shooting wrapped


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->