வெற்றி கொண்டாட்டத்தில் ராஜா ராணி 2 சீரியல் குழு.! வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் சின்னத்திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக நிறைய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர்தான் ஆலியா மானசா. இதன்பின்னர் விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இவர் நடித்த செம்பா கதாபாத்திரம் மிகப்பெரிய வைரல். 

சமூகவலைதளங்களில் இந்த கதாபாத்திரம் குறித்து மீம்ஸ்கள் போடப்பட்டதால் ஆலியா மானசா பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்தார். இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவினை ஆலியா காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு அழகான குட்டி மகள் இருக்கின்றார். 

தற்போது நடிகர் சித்துவுக்கு ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார். அதில் மிகவும் பிற்போக்குத்தனமான மாமியாருடன் ஐபிஎஸ் அதிகாரியாக போகும் ஆலியா மானசா அனுபவிக்கும் கொடுமைகள் போன்றவை இல்லத்தரசிகளுக்கு மிகவும் சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கும். 

இந்த நிலையில், தற்போது ராஜா ராணி 2 சீரியல் 300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் வெற்றியை கொண்டாட படக்குழு கேக் வெட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raja Rani 2 serial crew celebration


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->