ஆதிபுருஷ் திரைப்படத்திற்க்கு, நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்! - Seithipunal
Seithipunal


இராமாயண கதையை மையமாக வைத்து ஓம்ராவத் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் ஆதி புரூஷ். இந்த படத்தில் கதாநாயகனாக பாகுபாலி படப் புகழ் பிரபாஸ் நடிக்கிறார்.

இராவணன் வேடத்தில் சைப் அலிகானும் சீதையாக கீர்த்தி செனானும் நடித்து உள்ளனர். படத்தின் டீசர் வெளியீடு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரபாஸ் திரைத்துறையில் தனது அனுபவங்களையும், நடக்கவிருக்கும் தனது திருமணத்தைப் பற்றியும் இரசிகர்களிடையே பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிபுருஷ் திரைப்படம் எனக்கு வெறும் படம் அல்ல கிடைத்த பாக்கியம் என்றும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் கிராபிக்ஸ் குறைபாடுகளால் , மேலும் 100 கோடி ரூபாய் செலவில் தரமான 3டி தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஆதிபுருஷ் கதாநாயகன் பிரபாஸுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது;

ஒட்டுமொத்த ‘ஆதிபுருஷ்’ படக்குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஒரு பான் இந்திய நடிகராக இருந்துகொண்டு ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபாஸுக்கு என்னுடைய நன்றி. இன்றைய தலைமுறைக்கு ராமாயணத்தை கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சாதனை. படம் பிரம்மாண்ட வெற்றியடைய என்னுடைய பிரார்த்தனைகள். ஹரே ராம் என கூறியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ragava Lawrance Says Thanks For Actor Prabhas


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->