புஷ்பாவை பதறவிட்ட ரசிகன்! இது வேற லெவல் சம்பவம் மாமே! - Seithipunal
Seithipunal


நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் வசூலில் ‌இந்திய அளவில் சாதனை படைத்தது. மேற்கொண்டு, இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக  நடந்து வருகிறது.

இத்திரைப்படத்தில், நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் பின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், படத்தின் இறுதி கட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தினால் இத்திரைப்படம் வெளியாக காலதாமதம் ஆகும் என இப்பட குழுவினர் தெரிவித்திருந்தனர்.


 

இதனைத் தொடர்ந்து தற்போது இப்படம்  வருகின்ற டிசம்பர் மாதம் 6-ம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் அறிவுக்கு வெளியிட்டுள்ளனர். இதனை அறிந்த ரசிகர்கள் படம் வெளியாக காலதாமதம் ஆகுவதை எண்ணி ஆத்திரமடைந்தனர்.

மேலும், இப்படக் குழுவினரை ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் படம் காலதாமதம் குறித்து திட்டி வருகின்றனர். எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர், "இப்படம் வெளியாகும் தேதி எதற்காக ஜூன் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப்போனது. நீங்கள் எங்களின் உணர்வுகளோடு விளையாடுகிறீர்கள். நீங்கள் ஜோக் அடிக்கிறீர்களா? புஷ்பா-2 படம் காலதாமதம் குறித்து நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்" என்று குறிப்பிட்டு புஷபா பட குழுவையே பதறவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pushpa 2 Release date issue fan tweet viral


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->