தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு.! தப்பித்த அட்லீ.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கின்ற திரைப்படம் தான் ஜாவான். இந்த திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் ஷாருக்கான் தயாரித்து நடிக்கும் திரைப்படமாகும்.

இதற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல் முறையாக பாலிவுட் படத்தில் நடிக்கிறார். நடிகை நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்க இருக்கிறாராம். இந்த திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. 

நடிகர் விஜய் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், சமீபத்தில் நடிகர் ஷாருக்கான் மற்றும் விஜய் இருவரும் ஜாவான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது.இந்த நிலையில், இந்த ஜாவான் படம் தற்போது கதை திருட்டு சிக்கலில் சிக்கியது. 

இயக்குனர் அட்லியின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில், புகாரளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, "அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வருகின்ற ஜவான் படத்தின் கதையானது 2006-ல் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய பேரரசு திரைப்படத்தின் கதை" என்று என தெரிவிக்கப்பட்டது. 

இது குறித்த விசாரணை முடிவில், தயாரிப்பாளர் சங்கம், "அட்லீ இயக்க
கும் ஜாவான் திரைப்படம் பேரரசு திரைப்படத்தின் கதை அல்ல." என்று தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Producer club about Atlees Jawan Movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->