'இன்னமும் திருந்தாத பாலிவுட் சினிமா' திட்டித் தீர்க்கும் நடிகர்.!  - Seithipunal
Seithipunal


திரையுலகம் என்று எடுத்துக் கொண்டாலே அதில் பல்வேறு சர்ச்சைகள் நிறைந்து காணப்படும். மேலும், இந்த சினிமா உலகில் என்னதான் நடிகைகளை போற்றி புகழ்ந்தாலும் கூட நடிகர்களுக்கு பிறகு தான் அவர்கள் என்ற நிலை நீடிக்கின்றது. 

எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் கூட நடிகர்கள் வரும் வரை காத்திருக்கும் சூழல் இருக்கிறது  ஒரு காலத்தில் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்த நடிகைகள் இப்போது வாய் திறந்து பேச ஆரம்பித்துள்ளனர். தங்களுக்கு சம உரிமை வேண்டும் என்று பலரும் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

இது தயாரிப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகத்தில் பல நடிகர்களுக்கு கொடுக்கின்ற சம்பளத்தில் வெறும் பத்து சதவீதத்தை தான் நடிகைகளுக்கு கொடுக்கின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார். 

அத்துடன் படப்பிடிப்பு தளத்தில் நடிகருக்காக நடிகைகளை பல மணி நேரங்கள் காத்திருக்க வைக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். பிரியங்கா சோப்ரா நடித்து வரும் சீரியலில் ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை அவர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka Chopra blames Bollywood cinema


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->